Thursday, November 24, 2011

கலைடாஸ்கோப் -1





1.அறுத்துப் பார்த்த 
கணவனின் பிணத்துடன் 
தனியாக நின்றிருந்தாள் அவள் 
ஆம்புலன்சுக்கு காசு இல்லாமல் 
அழுதுகொண்டிருந்தாள்
வளருகில் 
அவள் குழந்தை 
யாரோ வாங்கித் தந்த 
சிகப்பு மிட்டாயைச் சப்பிக் கொண்டிருந்தது 

எல்லா துக்கங்களையும் 
மறக்கடிக்கும் 
சிகப்பு மிட்டாய் ஒன்று 
எனக்கும் தா கடவுளே ..




2.மணல் நதியில்
நீந்தித் திளைக்கிறது மீன்

ஒன்று
அது மீனல்ல
அல்லது
அது நீந்துவது மணல் அல்ல.

ஆனால்
என் கனவில்
ஒன்றல்லது மற்றது
என்பதே கிடையாதே ...


3.பல நேரங்களில்
இல்லாத கதவுகளை
திறக்க முயலும்
குடிகாரனின் முயற்சி போல
ஆகிவிடுகிறது


சிலருடனான உரையாடல் .....


4.நுரை பொங்க
பழுத்த ரொட்டியில்
தடவப் படும்
என் பச்சை ரத்தம்..
உண்டு வளர்த்துக் கொள்
உன் உயிர்த் தசையை ...

5.நீங்கள் 
இறங்கும் போதிருந்த 
அதே ஆறுதான் இது 
ஆனால் 
நீங்கள்... 
இறங்கும் போதிருந்த 
அதே ஆள்தானா?











3 comments:

  1. பின்புலம் இல்லாமலேயே சிகப்பு மிட்டாய் சிறப்பாக இருந்திருக்கும் போல் தோன்றுகிறது. நான்காவது புரியவில்லை. 3ல் தினம் நோகிறேன். உங்கள் கவிதை படித்ததும் சற்று ஆறுதல்.. :)

    very nice!

    ReplyDelete
  2. "பல நேரங்களில்
    இல்லாத கதவுகளை
    திறக்க முயலும்
    குடிகாரனின் முயற்சி போல
    ஆகிவிடுகிறது


    சிலருடனான உரையாடல் ....." I love it.
    பாவம் அப்பாதுரை !

    ReplyDelete
  3. :) Santhini..
    இந்தக் கவிதையைப் பத்தி என் மூத்த நண்பர் ஒருவர் கிட்டே சொன்ன போது அவர் என்னைப் பார்த்த பார்வையை எப்படிச் சொல்வது.. 'இப்பவாவது புரியுதா உனக்கு என்னோட கஷ்டம்?' என்பது போல பார்த்தார். சம தர வட்டத்துக்குள்ளே நின்னுகிட்டு சுத்தியிருக்கறவங்களைப் பார்க்குற மாதிரி ஆயிடுச்சு.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails